கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள்தான்
துடித்திருந்தேன் கரையினிலே
திரும்பி விட்டேன் கடலிடமே
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா?
மன்னிப்பாயா?
மன்னிப்பாயா?
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் நானும் மாலையாகிப் போனேன்
உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில்
வெளிச்சம் நீ
உன்னை நோக்கியே
என்னை ஈர்க்கிறாயே
மேலும் மேலும்
உருகி உருகி
உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?
ஓடும் நீரில் ஓர் அலை தான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன்
மன்னிப்பாயா அன்பே?
காற்றிலே ஆடும்
காகிதம் நான்
நீதான் என்னைக்
கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி
அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
ஏன் என் வாழ்வில் வந்தாய்
கண்ணா நீ??
போவாயோ கானல் நீர்
போலே தோன்றி?
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல்
கொன்று புதைதேனே
மன்னிப்பாயா?
மன்னிப்பாயா?
மன்னிப்பாயா??
Wednesday, March 17, 2010
மன்னிப்பாயா??
Posted by pavi at 12:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment