THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES

Saturday, December 5, 2009

தீராதது (sena)

தீராதது
காதல் தீராதது
தீர்வாகுதே
உந்தன் பார்வைகளே
சுகமானது
காதல் இதமானது
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே
உந்தன் அழகே என்னை
தினம் தொழு வைத்தது
உந்தன் நினைவே என்னை
தினம் சிறை வைத்தது
உந்தன் நெருக்கம் கொண்ட
ஆடை மீது கோபம்

தலையில் சீப்பை
சொருகிக் கொண்டு
தேடுவதை போல
உன்னை அருகில்
வைத்துக் கொண்டே
தேடுகிறேன்
எங்கே போனாய்?
இத்தனை நாளாய்
கனவில் நீயும் இல்லை
தினமும் தேடி
இமைகள் மூடிக்
கரைந்தேனே
காதல் கதவை நீயும்
கண்ணே மூடிக் கொண்டால்
காற்றாய் நானும் மாறி
ஜன்னல் வழியாய் வருவேன்
அந்த மூடியக் கதவில்
காற்றும் வருதே
உணர்ச்சிகள் இவைதானே

என்னைக் கடந்து
செல்லும் போது
எனக்குள் ஏதோ செய்தாய்
என்னைக் கடத்தி
ஏன்தான் நீயும்
சென்றாயோ?
என்னைப் பற்றி
நிதமும் ஏதோ
நினைக்கத்தானே செய்தாய்
பொய்யும் இல்லை
விக்கல் வந்து
சொல்கிறதே
உன்னைத் தேடிச் செல்ல
இரவே பகலானது
கண்கள் ஏதோ சொல்ல
கண்ணீர் தேனானது
எந்தன் மனசுக்குள்ளே
மறைந்திருந்தாயே
அலைந்தது நான்தானே

0 comments: