THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES

Saturday, November 14, 2009

அழகிய தரிசனம் (ஆணை)

அழகிய தரிசனம்
அழகிய தரிசனம்
என் மூச்சில் பூ வாசம்
இது உன்னாலே ஆனது
பல நூறாண்டு உன்னோடு நான் இருந்தேன்
அது போதாமல் இப்போதும் பிறந்து வந்தேன்
உன் காதலில்
உன் தீண்டலில்
எப்போதும் நான் வாழுவேன்

இருளிலும் உன்னை மட்டும் காணும்
விழிகளில் எரியுது தீபம்
நீதான் என் தெய்வம் கருவறையில்
என் பெண்மை தேடும் வரும் வரையில்
அடி உன் பாதம் தீண்டும் மண் சாலை கூட
தேனூறும் சாலைகள் ஆகும் ஆகும்
அழகிய தரிசனம்
உடல் ஓவியம் பிடிக்கிறதே
இமை தூரிகை துடிக்கிறதே
ஆயிரம் வார்த்தை யோசிக்கிறேன்
ஓரிரு வார்த்தை பேசுகிறேன்
அடி நீ தந்த வானம்
நீ தந்த பூமி
நீ தந்த காற்றுக்குள் வாழ்வேன் நானே

அழகிய தரிசனம்
அழகிய தரிசனம்

பின்னிரவு பனி விழும் நேரம்
என் மனதில் உன் அழகின் ஈரம்
காகிதமாக மாறுகிறேன்
கவிதைகளாலே தளும்புகிறேன்
அடி மீன் துள்ளும் ஓசை
நீருக்குத் தெரியும்
நீ இங்கு நானாக வா வா வா வா
அழகிய தரிசனம்
ஒரு பார்வையால் மழை கொடுத்தாய்
மறு பார்வையால் குடைப் பிடித்தாய்
வானவில் பாலம் போடுகிறேன்
சூரியன் உன்னைத் தேடுகிறேன்
இந்த தேடல்கள் போதும்
தேடல்கள் போதும்
ஏக்கங்கள் தீராது
வா வா வா வா ...

0 comments: