THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES

Saturday, November 14, 2009

கண்களில் என்ன ஈரமோ (உழவன்)

கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா?
ஒரு தாயைப் போல உன்னைத் தாங்கவா?

பெற்றவள் விட்டு போகலாம்
அன்னை பூமியும் விட்டுப் போகுமா?
தன்னுயிர் போலக் காப்பதில்
தாயும் நிலமும் ஒன்றுதான்
இருக்கும் தாயைக் காத்திடு
மயக்கம் தீர்ந்து வாழ்ந்திடு
புதுக் கோலம் போடு விழி வாசலில்
தயக்கம் ஏனையா?

அம்மம்மா இன்று மாறினேன்
அன்புக்கு நன்றி கூறினேன்
உள்ளத்தின் காயம் ஆறவே
உதவியதுன் வார்த்தைதான்
நிம்மதி இன்றி வாடினேன்
நின்றிட நிழல் தேடினேன்
திக்கற்று போன வேளையில்
தெரிந்தது என் பாதைகள்
உனது பாடல் கேட்டது
மனதில் பாலை வார்த்து
புயல் காற்றில் வாடி நின்ற ஓடம் தான்
கரையைச் சேர்ந்தது

கண்களில் இல்லை ஈரமாய்
நெஞ்சினில் இல்லை பாரமே
கைகளில் அதை வாங்கினாய்
ஒரு தாயைப் போல என்னை தாங்கினாய்

0 comments: