THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES

Wednesday, December 9, 2009

நான் பாடும் (இதயக்கோயில்)

நான் பாடும் மௌன ராகம்
கேட்கவில்லையா?
என் காதல் ராணி இன்னும்
தூங்கவில்லையா?
கண்ணீரில் உன்னைத்
தேடுகின்றேன்
என்னோடு நானே
பாடுகின்றேன்

உன்னைக் கண்டு தென்றலும்
நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா
வந்து போவதுண்டு
ஏன் தேவி என்னை நீ
இன்றுக் கொல்கிறாய்?
முள் மீது ஏனடி
தூங்கச் சொல்கிறாய்?
உன்னைத் தேடி தேடியே
எந்தன் ஆவி போனது
கூடு தானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது

கண்கள் என்னும் சோலையில்
காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்புதான்
சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே
நீயும் இல்லையே
என் சோகம் பாடவே
ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது
காம்பு என்ன வாழ்வது?
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று
கேலியாகிப் போனது


Saturday, December 5, 2009

தீராதது (sena)

தீராதது
காதல் தீராதது
தீர்வாகுதே
உந்தன் பார்வைகளே
சுகமானது
காதல் இதமானது
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே
உந்தன் அழகே என்னை
தினம் தொழு வைத்தது
உந்தன் நினைவே என்னை
தினம் சிறை வைத்தது
உந்தன் நெருக்கம் கொண்ட
ஆடை மீது கோபம்

தலையில் சீப்பை
சொருகிக் கொண்டு
தேடுவதை போல
உன்னை அருகில்
வைத்துக் கொண்டே
தேடுகிறேன்
எங்கே போனாய்?
இத்தனை நாளாய்
கனவில் நீயும் இல்லை
தினமும் தேடி
இமைகள் மூடிக்
கரைந்தேனே
காதல் கதவை நீயும்
கண்ணே மூடிக் கொண்டால்
காற்றாய் நானும் மாறி
ஜன்னல் வழியாய் வருவேன்
அந்த மூடியக் கதவில்
காற்றும் வருதே
உணர்ச்சிகள் இவைதானே

என்னைக் கடந்து
செல்லும் போது
எனக்குள் ஏதோ செய்தாய்
என்னைக் கடத்தி
ஏன்தான் நீயும்
சென்றாயோ?
என்னைப் பற்றி
நிதமும் ஏதோ
நினைக்கத்தானே செய்தாய்
பொய்யும் இல்லை
விக்கல் வந்து
சொல்கிறதே
உன்னைத் தேடிச் செல்ல
இரவே பகலானது
கண்கள் ஏதோ சொல்ல
கண்ணீர் தேனானது
எந்தன் மனசுக்குள்ளே
மறைந்திருந்தாயே
அலைந்தது நான்தானே

Saturday, November 14, 2009

ஏனோ ஏனோ (ஆதவன்)

ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளி மண் மேலே
தேனோ பாலோ
எரியுது எரியுது தீ போலே
மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய்
நீ போனாய்
என் நெஞ்சம் ஏனோ மெத்தை தானா
கூறாய் நீ கூறாய்
உன்னை பூட்டிக் கொண்டாயே
வாராய் வெளி வாராய்
இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே

மௌனம் என்னும் சாட்டை வீசி என்னைக் கீறாதே
மாலைத் தென்றல் பட்டால் கூடக் காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை
வா என் பக்கம்
தேடல் கொஞ்சம்
ஊடல் கொஞ்சம்
நீ யார் பக்கம்?
ஏதோ ஒன்று
என்னைத் தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே நானும் சாய்ந்தேன்
உன்னை மட்டும்
எண்ணி எண்ணி
நிலவைப் போல நீயில்லாமல் தேய்ந்தேன்

நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
பேசிப் போட்ட வார்த்தை எல்லாம் அள்ளிச் சென்றதே
சேலை ஒன்றும்
மாலை ஒன்றும்
வாங்கி வந்தாயா?
செய்தி நல்ல செய்தி சொன்னால் வேண்டாம் என்பாயா?
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப் போலே
தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்


கண்களில் என்ன ஈரமோ (உழவன்)

கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா?
ஒரு தாயைப் போல உன்னைத் தாங்கவா?

பெற்றவள் விட்டு போகலாம்
அன்னை பூமியும் விட்டுப் போகுமா?
தன்னுயிர் போலக் காப்பதில்
தாயும் நிலமும் ஒன்றுதான்
இருக்கும் தாயைக் காத்திடு
மயக்கம் தீர்ந்து வாழ்ந்திடு
புதுக் கோலம் போடு விழி வாசலில்
தயக்கம் ஏனையா?

அம்மம்மா இன்று மாறினேன்
அன்புக்கு நன்றி கூறினேன்
உள்ளத்தின் காயம் ஆறவே
உதவியதுன் வார்த்தைதான்
நிம்மதி இன்றி வாடினேன்
நின்றிட நிழல் தேடினேன்
திக்கற்று போன வேளையில்
தெரிந்தது என் பாதைகள்
உனது பாடல் கேட்டது
மனதில் பாலை வார்த்து
புயல் காற்றில் வாடி நின்ற ஓடம் தான்
கரையைச் சேர்ந்தது

கண்களில் இல்லை ஈரமாய்
நெஞ்சினில் இல்லை பாரமே
கைகளில் அதை வாங்கினாய்
ஒரு தாயைப் போல என்னை தாங்கினாய்

அழகாகச் சிரித்தது (டிசம்பர் பூக்கள்)

அழகாகச் சிர்த்து அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்து இந்த மனது
இதுதான் வயதோ
மழைக்காலத்தில் நிழல் மேகங்கள்
மலையோரத்தில் சிறு தூறல்கள்
இளவேனிற் காலம் ஆரம்பம்

நதியே நீராடதான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
நாணல் நானாகத்தான் காத்துக் கிடந்தேன்
காற்றே உன்னை பார்த்தும் கை சேர்த்தேன்
மானே உன் அழகினில் நானே
ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல
நானே என் இதயத்தைத் தானே
எடுத்துக் கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள
பனி தூங்கும் ரோஜாவே
எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள் இதுதான் வரவோ
நாணமென்ன அச்சமென்ன

உன்னை நான் அள்ளவோ
கண்ணில் வரைந்தே
நாளும் என் ஓவியம் நீதானே
கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்
காதல் போராட்டமே நான் பார்த்தேன்
மோகம் பொங்கி வரும் நேரம்
கொண்டதொரு தாகம்
நான் பெண்ணல்லவோ
நானும் கொஞ்சிட அது தீரும்
கட்டிலில் இணை சேரும்
என் கண்ணல்லவா
இள மாலைப் பொழுதாக
இரு நெஞ்சம் இனிதாக
இனிமை வழியும் இளமை இதுவோ
இரு விழி சிவந்திட

அழகிய தரிசனம் (ஆணை)

அழகிய தரிசனம்
அழகிய தரிசனம்
என் மூச்சில் பூ வாசம்
இது உன்னாலே ஆனது
பல நூறாண்டு உன்னோடு நான் இருந்தேன்
அது போதாமல் இப்போதும் பிறந்து வந்தேன்
உன் காதலில்
உன் தீண்டலில்
எப்போதும் நான் வாழுவேன்

இருளிலும் உன்னை மட்டும் காணும்
விழிகளில் எரியுது தீபம்
நீதான் என் தெய்வம் கருவறையில்
என் பெண்மை தேடும் வரும் வரையில்
அடி உன் பாதம் தீண்டும் மண் சாலை கூட
தேனூறும் சாலைகள் ஆகும் ஆகும்
அழகிய தரிசனம்
உடல் ஓவியம் பிடிக்கிறதே
இமை தூரிகை துடிக்கிறதே
ஆயிரம் வார்த்தை யோசிக்கிறேன்
ஓரிரு வார்த்தை பேசுகிறேன்
அடி நீ தந்த வானம்
நீ தந்த பூமி
நீ தந்த காற்றுக்குள் வாழ்வேன் நானே

அழகிய தரிசனம்
அழகிய தரிசனம்

பின்னிரவு பனி விழும் நேரம்
என் மனதில் உன் அழகின் ஈரம்
காகிதமாக மாறுகிறேன்
கவிதைகளாலே தளும்புகிறேன்
அடி மீன் துள்ளும் ஓசை
நீருக்குத் தெரியும்
நீ இங்கு நானாக வா வா வா வா
அழகிய தரிசனம்
ஒரு பார்வையால் மழை கொடுத்தாய்
மறு பார்வையால் குடைப் பிடித்தாய்
வானவில் பாலம் போடுகிறேன்
சூரியன் உன்னைத் தேடுகிறேன்
இந்த தேடல்கள் போதும்
தேடல்கள் போதும்
ஏக்கங்கள் தீராது
வா வா வா வா ...

Saturday, November 7, 2009

நிமிர்ந்து நில் (சரோஜா)

நிமிர்ந்து நில்
துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்ததை நடத்திடு
நினைப்புதான் உன் பலம்
தடைகளை உடைத்திடு
தாமதம் அதை விடு
கடமைகள் புதியது
கரங்களை இணைத்திடு
போன வழி மாறிப் போனாலே வாராது
போ உந்தன் புதுப் பாதை போராடிடு
காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது
காலத்தை நீ மாற்றிக் கரையேறி முன்னேறு

நேற்றுமில்லை நாளையில்லை
இன்று மட்டும் என்றும் உண்டு
மாற்றமெல்லாம் மாற்றமில்லை
மாற வேண்டும் நீயும் இன்று
ஓடி ஓடி கால்கள் ஓய்ந்து
தேடி தேடி கண்கள் சாய்ந்து
போவதேனோ?
வீரன் இன்று பிறப்பதில்லை
வீரனாக ஆவதுண்டு
கோழை என்று எவனும் இல்லை
கோபம் கொண்டால் கோழை இல்லை
இங்கு உன் வாழ்வு உன் கையில்
உன் வேகம் உன் நெஞ்சில்
இங்கே உன் ஆண்மைக்கு இப்போதுதான் சோதனை

விழுவதென்றால் அருவி போல
எழுவதென்றால் இமையால் போல
அழுவதென்றால் அன்புக்காக
அனைத்தும் இங்கே நட்புக்காக
ஓய்ந்து போனால்
சாய்ந்து போனால்
உந்தன் வாழ்வில் ஏதும் இல்லை
ஓய்ந்திடாதே மோதிப் பாரு
முயன்று ஏறு
முடிவு உந்தன் படைகள் வெல்லும்
வந்து போவார் கோடி பேர்கள்
வாழ்ந்தவர் யார் உலகம் சொல்லும்
நீயும் முன்னாளிலே ஜீரோ
இப்போதுதான் ஹீரோ
நில்லாதே எப்போதும் உன் முன்னே தடைகள் இல்லை


சிறகுகள் (சர்வம்)

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே
கனவுகள் பொங்குது எதிலே அல்ல?
வழிகளும் கூடுது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே

உன்னை உன்னைத்
தாண்டிச் செல்ல
கொஞ்ச காலம்
கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம்
கூட என்னால் ஆகுமோ?
உன்னை உன்னைத்
தேடித் தானே
இந்த ஏக்கம்
இந்த பாதை
இந்த பயணம்
இந்த வாழ்க்கை ஆனதோ?

நதியே நீ எங்கே என்று கரைகள் தேடக் கூடாதா?
நிலவே நீ எங்கே என்று முகில்கள் தேடக் கூடாதா?
மழை இரவினில் குயிலின் கீதம் துடிப்பது யார் அறிவார்?
கடல் அடியினில் கிடக்கும் பலரின் கனவுகள் இவள் அறிவாள்
அழகே நீ எங்கிருக்கிறாய்?
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்?
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்
அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே?
பூவின் உள்ளே
நிலவின் மேலே
தீயின் கீழே
காற்றின் வெளியே இல்லையே
உந்தன் கண்ணில்
உந்தன் மூச்சில்
உந்தன் இதழில்
உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில்
உந்தன் உயிரில் உள்ளதே

எனக்கே நான் சுமையாய் மாறி
என்னைச் சுமந்து வந்தேனே
உனக்கே நான் நிழலாய் மாறி
உன்னைத் தேடி வந்தேனே
விழி நனைந்திடும் நேரம் பார்த்து
இமை விலகி விடாது
உயிர் துடித்திடும் உன்னை எந்தன்
உயிர் ஒதுக்கி விடாது
உலகம் ஓர் புள்ளியாகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஓர் பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே


கல்லை மட்டும் (தசாவதாரம்)

கல்லை மட்டும் கண்டால்
கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால்
கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும்-என்றும்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது?
அஷ்ட ஆட்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச ஆட்சரம் பார்க்காது
மூடர்க் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம் தான்

இல்லையென்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
வீர சைவர்கள் முன்னால் எங்கள் ஈர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜ லட்சுமி நாயகன் ஸ்ரீனிவாசன் தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா??
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா??
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது